1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 22 ஜூலை 2024 (10:11 IST)

சூரியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?... பார்த்திபன் பகிர்ந்த தகவல்!

கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.

இந்த படத்தின் மூலம் சூரி, தமிழ் சினிமாவில் தன்னை ஒரு நிலையான ஹீரோவாக அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் அவர் நடித்த கருடன் திரைப்படம் வெளியாகி 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்தது. இந்நிலையில் சூரியின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் நடிகர் பார்த்திபன் பேசிய நேர்காணலில் “சூரியின் வளர்ச்சி மகிழ்ச்சியாக உள்ளது. கிராமத்தில் இருந்து வந்து சென்னையில் அவர் அடைந்திருக்கும் வளர்ச்சி அபரிமிதமானது. அவருக்கு இப்போது சம்பளம் 8 கோடி ரூபாய். முன்பு சாலிகிராமத்தில் அவர் இடம் வாங்கினார். இப்போது சாலிகிராமத்தையெ வாங்கும் அளவுக்கு வளர்ந்துள்ளார்” எனப் பேசியுள்ளார்.