ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (09:51 IST)

இன்று வெளியாகிறது சூரியின் கொட்டுக்காளி ரிலீஸ் தேதி!

விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனான சூரி இப்போது கொட்டுக்காளி மற்றும் இன்னொரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை கூழாங்கல் படத்தின் மூலம் கவனம் பெற்ற பி எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். அன்னாபென் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வாகியது. ஆனால் இறுதி சுற்றில் இந்த படம் விருது பெறாமல் வெளியேறியது. இதையடுத்து பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இது சம்மந்தமாக வெளியான அறிவிப்பில் இன்று மாலை முக்கியமான அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.