செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2017 (10:10 IST)

பத்தாயிரம் அடி உயரத்தில் '2.0' போஸ்டருடன் பறந்த ஸ்கை டைவர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் இன்று துபாயில் வெளியாகவுள்ளது.



 
 
இன்று பாடல்கள் வெளியாகவுள்ளதை அடுத்து இந்த படத்தின் மிகப்பெரிய போஸ்டரை கையில் ஏந்தி கொண்டு பத்தாயிரம் அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவர்கள் பறந்தனர். ஏற்கனவே பிரமாண்டமான ராட்சத பலூன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹாலிவுட்டில் பறக்கவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த கண்கொள்ள காட்சியின் புகைப்படத்தை லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.இந்த இசை வெளியீட்டுக்கு மட்டுமே லைகா நிறுவனம் ரூ.12 கோடி செலவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.