செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2017 (15:15 IST)

கந்து வட்டியில் சிக்கி கதறும் நடிகை...

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை ஆனந்தி(25), கந்து வட்டி கொடுமையில் சிக்கிய விவகாரம் தெரியவந்துள்ளது.


 

 
தாமரை உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களில் இவர் நடித்தவர் ஆனந்தி. இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது கணவருடன் சென்னை போரூரில் வசித்து வருகிறார்.
 
ஆனந்தி தனது உறவினர் ஒருவரிடம் ரூ.5 லட்சம் கடனாக பெற்றுள்ளார். அதற்கு வட்டியாக ரூ.1.80 லட்சத்தை இதுவரை கொடுத்துள்ளார். மேலும், உத்தரவாதத்திற்காக கையெழுத்திட்ட காலி வங்கி காசோலையையும் கொடுத்துள்ளார். அதைப் பயன்படுத்தி ரூ.30 லட்சம் மதிப்புள்ள அவரது வீட்டை எழுதிக்கேட்பதாகவும், மறுத்தால் அவர் மீது ஆசிட் வீசுவிடுவதாக கடன் கொடுத்தவர் மிரட்டுவதாக அவர் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. எனவே, சென்னை கமிஷனர் அலுலகத்திற்கும், முதல் அமைச்சர் தனிப்பிரிவிற்கும் அவர் புகார் மனு அனுப்பியுள்ளார்.
 
தங்களுக்கு கடுமையான மன உளைச்சலை உண்டாக்கும் அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆனந்தி கூறியுள்ளார்.