1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 26 அக்டோபர் 2017 (14:55 IST)

15,000அடி உயரத்தில் சிக்கிய அமெரிக்க வீரரை காப்பாற்றிய இந்திய ராணுவம்

இமாச்சலப் பிரதேசத்தில் பாரா கிளைடிங் பயிற்சியின் போது 15,000 அடி உயரத்தில் சிக்கிக்கொண்ட அமெரிக்க வீரர் ஒருவரை இந்திய ராணுவம் காப்பாற்றியுள்ளது.


 

 
இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கங்கரா மாவட்டத்தில் உள்ள பைஜ்நாத் பகுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த பேரி ராபர்ட்ஸ் என்பவர் பாரா கிளைடிங் மேற்கொண்டார். பறந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 15,000 அடி உயரத்தில் இருந்த பாறை ஒன்றில் சிக்கிக்கொண்டார். 
 
உடன் பறந்தவர்கள் அவரை காணவில்லை என தேடியுள்ளனர். அவர் காணவில்லை என ராணுவத்திடம் தகவல் கொடுத்துள்ளனர். அதன்படி இந்திய ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டது. ராபர்ட்ஸ் பாறை ஒன்றில் சிக்கிக்கொண்டு இருந்ததை கண்டுபிடித்து, அவரை பத்திரமாக மீட்டனர்.