வியாழன், 10 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (06:52 IST)

முகுந்த் வரதராஜன் போலதான் என் அப்பாவும்… சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனோடு சாய்பல்லவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் அமரன் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள சிவகார்த்திகேயன் “முகுந்த் வரதராஜன் போலதான் என் அப்பாவும். அவர், முகுந்த் போல போருக்கு செல்லவில்லை. ஆனால் அவரும் தன் வேலையில் இருக்கும்போதுதான் உயிரிழந்தார். அவர் வேலையில் அதிக அழுத்தம். அதுதான் அவரது மரணத்துக் காரணம்.

திடீரென்று ஒருநாள் வந்து ஒருநாள் உனக்கு இனிமேல் அப்பா இல்லை என்றார்கள். அதனால் முகுந்தின் மனைவி மற்றும் அவர் மகளோடு எங்களைப் பொறுத்திப் பார்த்துக் கொள்ள முடிந்தது” எனப் பேசியுள்ளார்.