செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2024 (14:18 IST)

துப்பாக்கிய எப்பவும் கவனமா ஹேண்டில் பண்ணனும்… அமரன் பட நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் பதில்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்று 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆனால் அந்த காட்சியில் விஜய்யும் சிவகார்த்திகேயனும் பேசும் வசனத்தில் உள்ளர்த்தம் இருக்கும்படி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். படத்தின் க்ளைமேக்ஸில் வில்லனைக் கைது செய்து கட்டிப் போட்டுவிட்டு இவனை நீங்க பாத்துக்கோங்க. துப்பாக்கிய பிடிங்க சிவா.’ என சிவகாத்திகேயனிடம் சொல்வார் விஜய்.

அப்போது சிவகார்த்திகேயன் “உங்களுக்கு இதவிட ஏதோ ஒரு முக்கியமான வேல இருக்குன்னு போறீங்க… நீங்க போங்க நான் பாத்துக்குறேன்” என சொல்வார். இது விஜய் சினிமாவை விட்டு செல்வதால் இனிமேல் சிவகார்த்திகேயன் விஜய் இடத்தை நிரப்பப் போவதாக பேசுவது போலவும் எடுத்துக் கொள்ளலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து விவாதம் செய்தனர்.

இந்நிலையில் தற்போது அமரன் பட ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயனிடம்  ‘துப்பாக்கியின் கணம் எப்படி இருக்கிறது?” என இரட்டை அர்த்தத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அதே மாதிரி இரட்டை அர்த்தத்தில் “துப்பாக்கி எப்பவும் கணமானது. அதை கவனமாக ஹேண்டில் செய்யவேண்டும்” என பதிலளித்துள்ளார்.