1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (08:23 IST)

சிவகார்த்திகேயன் & சுதா கொங்கரா இணையும் படத்தில் இருந்து விலகிய லோகேஷ் கனகராஜ்?

சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட புறநானூறு திரைப்படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் இந்த படத்தில் நடிக்க சூர்யா ஆர்வம் காட்டவிலலை என சொல்லப்பட்டது.

படம் தொடர்பாக சூர்யாவுக்கும் சுதா கொங்கராவுக்கும் இடையில் கதை சம்மந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை சிவகார்த்திகேயனை வைத்து டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தை Dawn pictures சார்பாக ஆகாஷ் என்பவர் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனோடு ஒரு முக்கியமான வேடத்தில் லோகேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வா நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தெரிகிறது.