செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (22:05 IST)

முதலமைச்சரை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன்: முக்கிய கோரிக்கை

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அவர்களை நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்
 
புதுச்சேரியில் படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்குமாறு நடிகர் சிவகார்த்திகேயன், முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தார்.
 
புதிய கட்டணமான ரூ.10,000 வசூலிக்காமல், ரூ.28,000-ஐ அதிகாரிகள் கேட்பதால் சினிமா துறையினர் பாதிக்கபட்டுள்ளதாக நடிகர் சிவகார்த்திகேயன்  கூறினார்
 
இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வதாக நடிகர் சிவகார்த்திகேயனிடம் புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது