1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 மார்ச் 2022 (16:11 IST)

அடுத்த லெவலுக்கு சென்ற சந்தானத்தின் குலுகுலு – வைரலாகும் புகைப்படம்!

சந்தானம் நடிப்பில் ரத்னகுமார் இயக்கும் படத்துக்கு குலு குலு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தலைப்பு சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த படத்துக்கு குலு குலு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. லாரி டிரைவரின் ஒருவரின் கதையாக உருவாகும் இந்த படத்தில் சந்தானம் லாரி டிரைவராக நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ள நிலையில் இப்போது படத்தின் டப்பிங் பணிகளை சந்தானம் தொடங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்று வருகிறது.