புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (16:34 IST)

50 மில்லியன் வியூஸைக் கடந்த சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் பாடல்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ஜலபுல ஜங் பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த ரிலீஸாக ‘டான்’ திரைப்படம் உள்ளது. இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வரும் நிலையில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துதுள்ளது. இந்த படம் மார்ச் மாதம் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதே நாளில் ஆர் ஆர் ஆர் படம் ரிலிஸ் ஆக உள்ளதால் மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என மாற்றி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து வெளியாகி கலக்கி கொண்டிருக்கும் ஜலபுலஜங் என்ற பாடல் இணையத்தில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதை சிவகார்த்திகேயன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.