வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (11:04 IST)

பிரபல நடிகரோடு இணைந்து சிவாங்கி பாடிய பாடல்… படக்குழுவினர் மகிழ்ச்சி!

குக்வித் கோமாள் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதைக் கொள்ளை அடித்தவர் சிவாங்கி.

விஜய் தொலைக்காட்சியில் சமையலை மையப்படுத்தி ஒளிபரப்பப் படும் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி அதிக அளவு பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட புகழ், சிவாங்கி மற்றும் ஷகீலா ஆகியோர் ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் அதிகளவு சேட்டைகள் செய்து இணையத்தைக் கலக்கி வரும் சிவாங்கி போல ரசிகர்களைக் கவர்ந்து சினிமாவில் நடிகையாகியுள்ளார். நடிப்பை போலவே பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் காட்டும் சிவாங்கி, இப்போது இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷோடு இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் அமீகோ கேரேஜ் எனும் படத்தில் இடம்பெற்றுள்ளது. விரைவில் இந்த பாடல் வெளியாக உள்ளது.