1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (18:41 IST)

சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 20’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் இருபதாவது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
 
பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் என்பவர் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் உக்ரைன் நாட்டு நடிகை ஒருவர் நாயகியாக நடித்து வருவதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன்னர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.  நடிகை மரியா என்பவர் இந்த படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இத்திரைப்படத்தில் சத்யராஜ் ராஷி கண்ணா உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடைந்து விடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்