வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (18:59 IST)

சிவகார்த்திகேயன் பட வில்லன் பிரேம்ஜியா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் பிரேம்ஜி தான் வில்லன் என்ற தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
கடந்த பல வருடங்களாக பிரேம்ஜி காமெடி நடிகராக மட்டுமே நடித்து வருகிறார் என்பதும் குணசித்திர வேடத்தில் கூட அவர் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 20 என்ற படத்தின் வில்லனாக பிரேம்ஜி நடிக்க இருப்பதாகவும் இருப்பினும் காமெடி கலந்த வில்லன் என்பதால் இந்த படத்தில் அவர் பொருத்தமாக இருப்பார் என இயக்குனர் அனுதீப் தெரிவித்துள்ளார்.
 
இந்த படத்தில் உக்ரைன் நாட்டின் அழகி மரியா என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் ராஷிகண்ணா நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது