வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (22:10 IST)

ஹீரோ ஆனார் சிவகார்த்திகேயன்!

தலைப்பை பார்த்ததும் அனைவரும் சிவகார்த்திகேயன் என்ன இதுவரை காமெடியனாகவாக நடித்து கொண்டிருந்தார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். ஆனால் இந்த தலைப்பிற்கு காரணம் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்திற்கு 'ஹீரோ' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதுதான்.
 
ஆம், 'Mr.லோக்கல்' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்திற்கு 'ஹீரோ' என்ற டைட்டிலை இயக்குனர் மித்ரன் தேர்வு செய்துள்ளாராம். அதிலும் இந்த டைட்டிலை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்த தயாரிப்பாளர் ஒருவரிடம் கேட்டு வாங்கியுள்ளாராம்
 
சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், ஆக்சன் கிங் அர்ஜூன்  இவானா உள்பட பலர் நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பதாகவும், அடுத்த மூன்றே மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.