செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (16:32 IST)

மீண்டும் தொடங்கிய சிவகார்த்திகேயனின் மாவீரன் ஷூட்டிங்!

சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

டாக்டர் மற்றும் டான் படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். ஹீரோயின் வேடத்துக்கு இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவர் விருமன் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய அறிவிப்பு வீடியோ வெளியானது. படத்துக்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பெயரில் ரஜினி படம் ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ ஒன்று கவனத்தை ஈர்த்தது.

இதையடுத்து தொடங்கிய படப்பிடிப்பு 3 நாட்கள் நடந்த நிலையில் அதன் பிறகு நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு பைனான்ஸ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சென்னையில் அந்த படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாம்.