வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2024 (15:57 IST)

என் தந்தை ஒரு லெஜெண்ட்; பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும்.. ஏஆர்.ரஹ்மான் மகன்

பிரபல இசையமைப்பாளர் ஏஆர்.ரஹ்மான்  தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் இது குறித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பு ஏற்படுத்தியது.

மேலும் சமூக வலைதளங்களில் இந்த விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் இல்லையேல் ஏஆர்.ரஹ்மான்  மகன் அமீன் தனது சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இது குறித்து கூறியதாவது:

என் தந்தை ஒரு லெஜெண்ட்; திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளால் மட்டுமல்ல, இத்தனை வருடங்களாக அவர் சம்பாதித்த மதிப்பு, மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றிற்காக அவர் லெஜெண்ட்;

ஆதாரமற்ற பொய்யான சில வதந்திகள் பரவுவதை பார்க்கும்போது மனமுடைகிறது; ஒருவரின் வாழ்க்கையை பற்றி பேசும்போது உண்மையின் முக்கியத்துவத்தையும், மரியாதையையும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்;

பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும்; அவரின் கண்ணியத்தை மதித்து அதனை காக்க வேண்டும்.  எல்லா புகழும் இறைவனுக்கே!”


Edited by Siva