திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 21 ஏப்ரல் 2021 (22:33 IST)

அமேசானில் ‘டாக்டர்’: ரிலீஸ் தேதி இதுதான்!

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் ரிலீஸ் தேதி ஏற்கனவே இரண்டு முறை அறிவிக்கப்பட்டு அதன்பின் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது அமேசான் ப்ரைமில் ரிலீஸ் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது 
 
இந்த படத்தை அமேசானில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் எனவே அமேசானில் டாக்டர் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
அமேசானில் டாக்டர் திரைப்படம் ரிலீஸ் ஆவது குறித்த தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் ரம்ஜான் தினத்தில் இந்த படம் அமேசானில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் தற்போது அமேசானில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது