1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (15:23 IST)

மற்றொரு ஹீரோ படத்துக்கு முதல் முறையாக பாடியுள்ள சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான கவின் நடித்துவரும் திரைப்படம் லிப்ட். இந்தப்படத்தில் பிகில் படத்தில் நடித்த அமிர்தா ஐயர் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் வரப்பிரசாத் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . பல மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் கவினுக்காக சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த பாடல் விரைவில் சிங்கிள் டிராக்காக வெளியாகும் என சொல்லப்படுகிறது.