வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (09:26 IST)

செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா: தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய சிவகார்த்திகேயன் மகள்!

aaradhana1
செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா: தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய சிவகார்த்திகேயன் மகள்!
கடந்த சில நாட்களாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் நேற்று நிறைவு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 
 
நேற்றைய செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த விழாவில் பல பிரமுகர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர் என்பதும் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா தமிழ் தாய் வாழ்த்து பாடினார். அவர் தனது மழலை மொழியில் தமிழ் தாய் வாழ்த்து பாடியது அங்குள்ள பார்வையாளர்கள் அவருக்கு மிகப்பெரிய கரகோஷத்தை எழுப்பினார்கள் என்பது குறிபிடத்தக்கது.