செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா; சென்னை வரும் பிரபலம் இவர்தான்!
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் கிரிக்கெட் பிரபலம் ஒருவர் சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த மாதம் இருபத்தி எட்டாம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நாளை ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளை அதாவது ஆகஸ்ட் 9 ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி கலந்து கொள்கிறார் என தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இதனை அடுத்து தல தோனி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது