1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (18:36 IST)

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: தோனி பங்கேற்கவில்லை என தகவல்!

Dhoni
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா இன்று சென்னையில் நடைபெறும் நிலையில் இந்த விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளன 
 
கடந்த ஜூலை இருபத்தி எட்டாம் தேதி ஆரம்பித்த செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஏராளமான இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய நிறைவு விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது 
 
இந்த நிலையில் திடீரென தற்போது தோனி இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளிவந்துள்ளது. இதனால் தோனியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இருப்பினும் இன்றைய செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மிகச் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது