1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2023 (09:33 IST)

மாவீரன் படத்தின் ஷூட்டிங் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தை மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதைப் படக்குழு முற்றிலுமாக மறுத்துள்ளது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது.

சமீபத்தில் பாண்டிச்சேரியில் படத்தின் இறுதிகட்ட காட்சிகளை படக்குழு படமாக்கியது. முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க, ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் யானிக் பென் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் 1946 படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், “மாவீரன் ஷுட்டிங் நிறைவடைந்துள்ளது. அடுத்து கமல் சார் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.