திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 22 மார்ச் 2023 (08:17 IST)

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்துக்கு பைனான்ஸ் செய்யும் பிரபல ஓடிடி!

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளார். அவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி வரும் நிலையில், இளம் நடிகர்களை வைத்து அதிக பட்ஜெட்டில் படங்களையும் உருவாக்கி வருகிறார்.

அதில் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு ஆகியோரும் அடங்குவர். சிம்புவின் படத்துக்கு பட்ஜெட்டே 100 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு பிரம்மாண்டமாக கமல்ஹாசனின் நிறுவனம் படம் தயாரிக்க பிரபல ஓடிடி நிறுவனத்தோடு அவர் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. படங்களை தொடங்குவதற்கு முன்பாகவே அந்த நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை முடித்துவிட்டு அதன் பிறகுதான் பட்ஜெட்டையே முடிவு செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.