ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (09:54 IST)

தன் இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்ட சின்மயி!

தமிழ் சினிமாவில் கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சின்மயி. அந்த படத்தில் அவர் பாடிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் தேசிய விருது வரை சென்றது. அதன் பிறகு பல மொழிகளில் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.

சின்மயி சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நடிகர் ராகுலை மணந்துகொண்டார். ராகுல் மாஸ்கோவின் காவிரி மற்றும் தி கிரேட் இந்தியன் கிச்சன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.  அந்த குழந்தைகளுக்கு திரிபத் & ஷர்வாஸ் என்று பெயர் சூட்டியிருந்தனர்.

இந்நிலையில் இப்போது குழந்தைகளின் முதலாமாண்டு பிறந்தநாளை முன்னிட்டு முதல் முறையாக குழந்தைகளின் முகங்கள் தெரியும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.