1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified புதன், 24 மே 2023 (17:22 IST)

கர்ப்பம் தரித்த 7 மாதத்தில், 5 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்: வியப்பில் மருத்துவர்கள்

கர்ப்பம் தரித்த 7 மாதங்களில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் பெற்றெடுத்த நிகழ்வு மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. 
 
பொதுவாக ஒரு பெண் பிரசவத்திற்கு 9 மாதங்கள் ஆகும் என்பதும் தெரிந்ததே. ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமான ஏழு மாதத்தில் குழந்தை பெற்றெடுத்தார். அதிலும் அவர் ஒரே பிரசவத்தில் அடுத்தடுத்து ஐந்து குழந்தைகளை நலமுடன் பெற்றெடுத்ததை பார்த்து மருத்துவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
 
மேலும் இது போன்ற அதிசயங்கள் 5 கோடி பிறப்புகளில் ஒரு முறை மட்டுமே நிகழும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தாய் மற்றும் ஐந்து குழந்தைகள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran