சாண்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்து தர்ஷனை கண்டுகொள்ளாத சிம்பு? - வைரல் வீடியோ!

Papiksha| Last Updated: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (15:00 IST)
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியார்களை சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதை நடிகர் சிம்பு வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் கடந்த முதல் மற்றும் இராண்டாவது சீசன்களில் பங்கேற்ற ஓவியா, ரித்விகா, யாஷிகா , ஐஸ்வர்யா தாத்தா என பலரையும் சந்தித்துள்ளார். 


 
இதற்கிடையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனை தொகுத்து வழங்கவுள்ளதாவும் பேச்சு அடிபட்டது. ஆனால், கமல் மட்டும் தான் கடைசி வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என நம்பத்தகுந்த இடத்தில் தகவல் கிடைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசனில் இரண்டாம் இடம் பிடித்து வெளியேறிய சாண்டியை நடிகர் சிம்பு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் சந்தித்துள்ளார். இந்த வீடியோ சமூகலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாண்டியுடன் தர்ஷனும் இருக்கிறார். ஆனால், அவருக்கு கைகுலுக்கி ஒரு ஹாய் மட்டும் சொல்லிட்டு சாண்டியை கட்டியணைத்து தூக்கிக்கொண்டார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் என்ன தலைவா... சாண்டிக்கு மட்டும் தான் ஸ்பெஷல் hug ஆஹ் தர்ஷனுக்கு கிடையாதா என கிண்டலாக கேட்டு வருகின்றனர்.  


இதில் மேலும் படிக்கவும் :