1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : புதன், 2 அக்டோபர் 2019 (14:00 IST)

கமலுடன் இணையும் தர்ஷன்....அட்டகாசமாக துவங்கிய முதல் பயணம்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் 'இந்தியன் 2' . லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் , சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். 


 
ராக்ஸ்டார் அனிருத்  இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்று வருகிறது. கமல் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசியல் என பல விஷயங்களில் பிஸியாக இருந்து வருகிறார். 1996ல் வெளிவந்த இப்படத்தின் முதல் பக்கம் கமல் ஹாசனின் திரைப்பயணத்தில் முக்கியப்பங்கு வகித்தது. இதனால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் குவிந்தது.           
எனவே தற்போது உருவாகிவரும் இப்படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் இணைந்திருப்பதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. பிக்பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷனை கமல் அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. சந்திப்பு இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கான அழைப்பு என்றும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளது.
 
பிக்பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷனுக்கு டைட்டில் கிடைக்காவிட்டாலும் முதல் படமே கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது அவருக்கு வரப்பிரசாதம் தான் என நெட்டிசன்ஸ் கூறி  வருகின்றனர்.