1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (21:31 IST)

யார் பிக்பாஸ் வின்னர்? வெளியேறிய போட்டியாளர்களின் கருத்து!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வின்னர் என்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி கொண்டிருந்தாலும் பெரும்பாலானோர் முகின் தான் வின்னர் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருசிலரே சாண்டி, லாஸ்லியா பெயர்களை கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 வின்னர் யாராக இருக்க வேண்டும் என்று இந்த போட்டியில் இருந்து வெளியேறியவர்கள் கருத்து கூறியபோது, பெரும்பாலானோர் முகின் பெயரைத்தான் குறிப்பிட்டனர். ஷெரின் பெயரை சாக்சி கூறினார். ஆனால் கவின் யார் வெற்றி பெற்றாலும் தனக்கு மகிழ்ச்சி என்றும், ஆனால் லாஸ்லியா வெற்றி பெற்றால் தனக்கு பெருமையாக இருக்கும் என்றும் கூறினார்.
 
மேலும் மீரா மிதுன், தர்ஷன், ஆகியோர் சாண்டியின் பெயரை தெரிவித்தனர். சேரன் தனது மகள் லாஸ்லியா பெயரை கூறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் முகின் பெயரை கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதேபோல் லாஸ்லியா பெயரை வனிதா கூறியதும் ஒரு ஆச்சரியமாக கருதப்பட்டது. 
 
மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஷெரின், ‘சாண்டி தான் வின்னர் என்று தான் கணித்திருப்பதாகவும் இரண்டாவதாக சாண்டி மற்றும் மூன்றாவதாக லாஸ்லியா என்றும் கூறி அதற்கான விளக்கத்தையும் அளித்தார்.