1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2019 (08:12 IST)

கமல் படத்தில் ஒப்பந்தமாகியும் ரஜினி தான் ஃபேவரேட்: தர்ஷன்

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் எதிர்பாராதவிதமாக கடைசி வாரத்தில் வெளியேறினாலும், பிக்பாஸ் டைட்டில் வென்ற முகினுக்கு முன்னதாகவே ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுவும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படத்திலேயே நடிக்க தர்ஷன் ஒப்பந்தமாகியுள்ளார்

மேலும் பிக்பாஸ் பயணத்தில் 100 நாட்கள் கமல்ஹாசனுடன் பயணம் செய்தும், கமலஹாசன் படத்தில் ஒப்பந்தமாகியும், சமீபத்தில் அளித்த பேட்டியில் ’தன்னுடைய பேவரைட் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றும், அவரது படத்தை பார்த்து தான் சிறுவயதில் இருந்து தான் வளர்ந்ததாகவும், அவருடைய ஸ்டைலில் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவர் என்ன செய்தாலும் அது ஸ்டைலாக இருக்க வேண்டும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய ஃபேவரிட் நடிகை தமன்னா என்றும், தமன்னாவுடன் நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்

ஏற்கனவே பிக்பாஸ் வெற்றி மேடையில் ரஜினியின் வசனத்தை சாண்டி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது தர்ஷனும் தான் ஒரு ரஜினிகாந்த் ரசிகன் என கூறியுள்ளது கமல் தரப்பை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது