வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (11:50 IST)

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விஷால் மீது புகார்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட போவதாக அறிவிப்பு வெளிவந்த அடுத்த நிமிடமே திரையுலகில் இருந்து அவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு வந்தது. குறிப்பாக இயக்குனர் அமீர், இயக்குனர் சேரன் ஆகியோர் விஷாலை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
 
நேற்று இயக்குனர் சேரன் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் விஷால் தனது பதவியில் இருந்து விலகிவிட்டு அதன் பின்னர் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடட்டும் என்று வலியுறுத்தினார்.
 
இந்த நிலையில் நடிகர் விஷால் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும், நடிகர் சங்க தேர்தலிலும் பணம் கொடுத்து விஷால் வெற்றி பெற்றதாக பேஸ்புக்கில் தகவல் வெளியாகியுள்ளதாகவும், இந்த தகவல்கள் பேஸ்புக்கில் வெளியான தகவல்கள் என அலட்சியமாக கருதாமல் விசாரணை செய்ய வேண்டும் என்றும் தேவராஜன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீது காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்