திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒரு நாள் போட்டிகளில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக கடந்த வருடத்தின் பெரும்பாலான நாட்கள் இடம்பிடித்திருந்தார்.

அதே போல டெஸ்ட் போட்டிகளிலும் சமீபத்தில் தன்னுடைய பார்முக்கு வந்தார். ஆனால் டி 20 கிரிக்கெட்டில் மட்டும் இன்னும் அவருடைய இடத்தை நிரந்தரமாக்க முடியவில்லை. தற்போது நடந்துவரும் ஐபிஎல் தொடரிலும் அவரது பேட்டிங் சராசரியாகவே உள்ளது.

இந்நிலையில் ஜூன் மாதம் நடக்கும் டி 20 உலகக் கோப்பை தொடரில் அவர் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அவர் “கடந்த சீசனில் நான் 900 ரன்கள் கிட்டத்தட்ட அடித்தேன். அப்போதே எனக்கு உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. அதனால் இப்போது நான் அதை நினைத்துக் கொண்டே விளையாடுவதில்லை. நான் அப்படி செய்தால் அது குஜராத் அணிக்கு நான் செய்யும் துரோகமாக அமையும். அதனால் நான் இப்போதைக்கு ஐபிஎல் தொடரை மட்டும் கவனம் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.