திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2024 (13:45 IST)

வட மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. இந்தியா கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பு..!

MK Stalin
இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வட மாநிலங்களில் பிரசாரம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளதாகவும், பிரசார சுற்றுப்பயண விவரம் தயாராகி வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 வரை 20 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்ட நிலையில் தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டதால் அடுத்தகட்டமாக வடமாநிலங்களில் இன்னும் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு திரட்டுகிறார் முதல்வர் முக ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெங்களூரில் தற்போது பிரச்சாரம் செய்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் வடநாட்டில் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஸ்டாலின் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள மேலும் சில அரசியல் கட்சி தலைவர்களும் வடநாட்டில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran