புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 26 செப்டம்பர் 2018 (21:55 IST)

ஐஸ்வர்யாவை நிலைகுலைய வைத்த ஷாரிக்கின் அந்த கேள்வி...

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.  இதில் வெற்றியாளர் யார் என்பது ஓரிரு தினங்களில் தெரிந்துவிடும்.

 
இப்போது போட்டியில் இறுதியாக ஐஸ்வர்யா, ஜனனி, விஜய லட்சுமி, ரித்விகா என 4 பேர்  இருக்கிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்கு நேற்று விருந்தாளியாக ஷாரிக் மீண்டும் வந்துள்ளார்.
 
கன்ஃபெஸன் ரூமில் இருந்த ஷாரிக்கை பார்த்து மகிழ்ச்சி அடைந்த ஐஸ்வர்யா குதித்தார். இவர்கள் இருவரது காதல் கொஞ்சலை நாம் பார்த்திருக்கிறோம்.

 
இருவரும நேற்று தனியாக் பேசிக்கொண்டிருக்க, ஷாரிக் அவரிடம் என்னை பற்றி நீ எனக்கு பின்னால் அதிகமாக மற்றவர்களிடம் பேசியதை பார்த்தேன்.
 
ஏன் அப்படி செய்தாய் என கேட்க, ஐஸ்வர்யா அதற்கு ஒரு பதிலை சொல்ல இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஷாரிக் அங்கிருந்து சென்று விட்டார்.  இதனால் மன வருத்தமான ஐஸ்வர்யா தனியே சோர்ந்து போய் அமர்ந்து காணப்பட்டார்.