திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (22:24 IST)

முதல் மூன்று இடத்தில் தமிழ்ப்பெண்கள் தான் வரணும்: ஆர்த்தி டுவீட்

பிக்பாஸ் இறுதிப்போட்டியில் ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி மற்றும் ஐஸ்வர்யா உள்ளனர். இதில் ஐஸ்வர்யா தவிர மீதி மூன்று பேர் தமிழ்ப்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸ் வின்னராக ஒரு தமிழ்ப்பெண் தான் வரவேண்டும் என்ற எண்ணம் இவர்கள் மூவரிடமும் உள்ளது. இவர்களுக்கு எதிராக களமிறங்கிய மும்தாஜ், யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா கூட்டணியில் தற்போது ஐஸ்வர்யா தனித்து விடப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் 1 போட்டியாளராகிய ஆர்த்தி தனது டுவிட்டரில், நம் தமிழ் பெண்கள் யாரிடமும் எதற்காகவும் தோற்கக்கூடாது..இவர்களுள் உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களியுங்கள் ஆனால் இவர்களுக்கு மட்டுமே!! நம் பெண்களை நாம் முதல் மூன்று வெற்றியாளறாக கொண்டாடுவோம்! என்று கூறியுள்ளார்.

மேலும் இன்னொரு டுவீட்டில் ஆர்த்தி கூறியபோது, 'இந்த ஐஸ்வர்யாவை சப்போர்ட் பண்ணுரவங்க உங்களோட வச்சுகோங்க அவங்கள பத்தி நிறையவே தெரியும்
மீறி தானா வந்து கதருபவர்கள் பிளாக் செய்யப்படுவீர்கள் என்று கூறியுள்ளார்.