மதுரவாயலில் ஏஜிஎஸ் நிறுவன திரையரங்கு திறப்பு
மதுரவாயலில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான திரையரங்கு செப்.27ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
மதுரவாயலில் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான புதிய பிரம்மாண்டமான திரையரங்கு வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சென்னையில் வில்லிவாக்கம் மற்றும் தி.நகரில் மல்டிபிளக்ஸ் திரையங்குகள் உள்ளது. இந்நிறுவனம் சென்னை மதுரவாயலில் புதிதாக மல்டிபிளக்ஸ் திரையரங்கினை அமைத்துள்ளது. இந்த திரையரங்கு வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
அதிநவீன வசதிகளுடன் மிக பிரம்மாண்டமான இந்த திரையரங்கு படம் பார்க்க வரும் பொதுமக்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்று ஏஜிஎஸ் நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டுவிட்டரில் ஏஜீஎஸ் நிறுவனம் திரையரங்கு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.