வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 26 செப்டம்பர் 2018 (09:21 IST)

மீண்டும் பிக்பாஸ் வீட்டில் யாஷிகா-பாலாஜி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு கொண்டிருந்த நிலையில் கடந்த வாரம் மட்டும் யாஷிகா, பாலாஜி ஆகிய இரண்டு பேர் எவிக்ட் ஆனார்கள். ஆனால் எவிக்ட் ஆன மூன்றே நாட்களில் இன்று மீண்டும் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

யாஷிகாவை பிரிந்து சோகத்துடன் இருந்த ஐஸ்வர்யா இன்று அவரை பார்த்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். சக போட்டியாளர்களுடன் டான்ஸ் ஆடி உற்சாகப்படுத்திய யாஷிகா, வீட்டிற்கு போன பின்னரும் வழக்கம்போல் மைக்கை தேடியதாக கூறினார்.

அதேபோல் பாலாஜியும் தன்னுடைய வீட்டில் நாய் குலைத்தால் உடனே எழுந்து 'டேய் யார்ரா தூங்குறது' என்று பழக்கதோஷத்தில் சொல்வதாக காமெடி செய்தார். பிக்பாஸ் இறுதிப் போட்டி இன்னும் நான்கு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் யாஷிகாவின் வருகையால் ஐஸ்வர்யா உள்பட அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.