1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 16 ஏப்ரல் 2020 (12:02 IST)

ஊரடரங்கால் நடிகைகளுக்கு ஏற்படும் வித்தியாசமான பாதிப்புகள்! மன்னிப்புக் கேட்ட அஜித் பட நடிகை!

அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஸ்ரத்தா ஸ்ரீநாத் தனது புருவங்கள் வளர்ந்துவிட்டதற்காக தயாரிப்பாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஊரடங்குக் காரணமாக சினிமா துறை முற்றிலுமாக முடக்கப்பட்டு நடிகர், நடிகைகள் வீடுகளிலேயே உள்ளனர். அவர்களுக்குப் பொருளாதார ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் உடல் ரீதியாக பிரச்சனைகள் உள்ளன. ஓய்வு நாட்களால் அவர்கள் உடல் எடை ஏறும் அபாயம் உள்ளது. இதனால் ஏற்கனவே நடித்த படங்களுக்கான தோற்றத்தை மீண்டும் கொண்டு வருவது மிகவும் சிரமமானக் காரியமாக இருக்கும்.

இந்நிலையில் நடிகை ஸ்ரத்த ஸ்ரீநாத் தனது தற்போதையப் புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டு அதில் ‘ என்னுடைய புருவங்கள் வளர்ந்து தடித்துவிட்டன. இதனால் எனது முந்தைய படங்களின் கண்ட்டியுனிட்டி தற்போது பாதிக்கப்படும். இதற்காக எனது தயாரிப்பாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.