திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (20:38 IST)

அஜித் ஏன் வெளியே வருவதில்லை! ரேஸர் சொன்ன ரகசியம்!

அஜித் ஏன் பொது விழாக்களில் கலந்து கொள்வதில்லை என்று ரேஸ் வீராங்கனையான அலிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்த்துவிட்டார். தனது படங்களின் இசை வெளியீடுகள் மற்றும் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்து கொள்வதில்லை. இதுகுறித்து பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்தின் நண்பரும் பிரபல ரேஸ் வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா அஜித்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஏன் அஜித் பொது இடங்களுக்கு வருவதில்லை என்று கூறியுள்ளார். அதில் ‘ மக்கள் அவருக்கான பிரைவசியை வழங்கமாட்டார்கள் என்பதால்தான் அவர் எப்போதும் வெளியே வருவதில்லை. இது அவர் கலந்துகொண்ட ரேஸ் பந்தயத்தின் கடைசி நாள். மக்கள் அவரை நடக்கக் கூட முடியாத அளவுக்கு சூழ்ந்துள்ளனர்’ எனக் கூறியுள்ளார்.