திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (20:14 IST)

அஜித்துக்கு ஸ்பெஷல் நன்றி கூறிய நடிகை கஸ்தூரி

கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகை கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே டுவிட்டரில் கடுமையான வார்த்தை போர் நடந்தது என்பதும், இதில் வெறுப்பாகி அஜித் மற்றும் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவுக்கு நடிகை கஸ்தூரி டுவிட்டர் மூலமே புகார் அளித்திருந்தார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று அஜித் கொடுத்த ரூ.1.25 கோடி நன்கொடையை அறிந்ததும் முதல் நபராக கஸ்தூரி தனது டுவிட்டரில் பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தல அஜித் அவர்களின் நல்ல மனசுக்கு 1.25 கோடி நன்றி. நீடூடி வாழ்க. தல அஜித்தின் உதவி செய்யும் மனப்பான்மை இதன் மூலம் தெரிய வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் தமிழ் திரைப்படத் துறையிலிருந்து இவ்வளவு பெரிய தொகை வேறு யாரும் கொடுக்கவில்லை. 
 
அதுமட்டுமின்றி பெப்சி தொழிலாளர்கள் ரூபாய் 25 இலட்சம் நிதி உதவி செய்த அஜித்திற்கு ஒரு ஸ்பெஷல் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும்’ என்று கூறியுள்ளார். கஸ்தூரியின் இந்த நன்றி கலந்த பாராட்டுக்கு அஜித் ரசிகர்களும் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக கருதப்படுகிறது