முதலமைச்சர் நிவாரண நிதியாக நடிகர் விவேக கொடுத்த பெரிய தொகை

vivek
முதலமைச்சர் நிவாரண நிதியாக நடிகர் விவேக கொடுத்த பெரிய தொகை
Last Modified திங்கள், 13 ஏப்ரல் 2020 (20:00 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி வரும் தமிழக அரசுக்கு உதவி செய்யும் வகையில் தொழிலதிபர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் நிதியுதவி செய்து வந்தாலும் திரையுலகினர் போதுமான நிதியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கவில்லை என்றே தெரிகிறது
அஜித் ரூ.50 லட்சமும், ராகவா லாரன்ஸ் ரூ.50 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.15 லட்சமும் தவிர குறிப்பிடத்தக்க வகையில் வேறு எந்த நடிகரும் முதலமைச்சர் நிவாரண நிதியாக கொடுத்ததாக தெரியவில்லை.

இந்த நிலையில் முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் விவேக் அவருடைய மகன் சாய் பிரசன்னா அறக்கட்டளையின் சார்பாக ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கியிருக்கிறார். இதனையடுத்து நடிகர் விவேக்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :