எல்லாத் தாமதத்துக்கும் லைகாதான் காரணம்… ஷங்கர் கொடுத்த ஷாக்கிங் பதில்!
இந்தியன் 2 படத்தின் தாமதத்துக்கு லைகா நிறுவனம்தான் காரணம் என ஷங்கர் தரப்பு பதில் கூறியுள்ளது.
இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என லைகா நிறுவனம் சமீபத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தயாரிப்பு மற்றும் இயக்குனர் தரப்பினர் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சுமூகமான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஷங்கர் தரப்பில் நீதிமன்றத்தில் அளித்த ஒரு தகவலில் முதலில் இந்தியன் 2 வை தயாரிக்க தில் ராஜு என்ற தயாரிப்பாளர் முன்வந்தார். ஆனால் லைகா நிறுவனம்தான், தாமாக முன்வந்து படத்தயாரிப்பைக் கைப்பற்றியது. தில் ராஜு தயாரித்திருந்தால் இந்நேரம் படம் ரிலீஸாகி இருக்கும். ஆனால் லைகா நிறுவனம், அரங்கு அமைத்தல், செலவுக்கு பணம் கொடுத்தல் என எல்லாவற்றிக்கும் தாமதம் செய்தது. இதனால் இந்தியன் 2 பட ரிலிஸுக்கு உண்மையான காரணம் லைகாதான் எனக் கூறியுள்ளார்.