புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 8 மே 2021 (15:53 IST)

இறந்த தாத்தாவின் ஒரு கோடி நினைவுகளை பகிர்ந்த பிரியா பவானி ஷங்கர்!

நடிகை பிரியா பவானி ஷங்கர் பதிவிட்ட எமோஷனல் பதிவு!
 
என் தாத்தா ஒரு successful business man. தனி மனுஷனா ஒன்னுமே இல்லாம வாழ்க்கைய ஆரம்பிச்சி 5 பசங்கள அமோகமா படிக்க வச்சி 10 பேரப் பசங்கள்ல 8 பேர டாக்டராக்கி அவங்களையும் டாக்டர்களுக்கு கட்டிக்கொடுத்து தான் உருவாக்கின ஒரு சிறிய மருத்துவர்கள் சூழ் உலகத்துல பெருமையா வாழ்ந்தவர்.
 
நான் தாத்தாவோட செல்ல பேத்திலாம் இல்ல. In fact odd person outனு கூட வச்சிக்கலாம். சின்னதுலேர்ந்தே ‘என்னமா இவ்ளோ துஷ்டத்தனம் பண்ணுது இது’ என்ற category நான். 10வது வரை ஸ்கூல் லீவ் விட்டா நாய் குட்டி மாதிரி எங்க 8 பேரையும் தாத்தா வீட்ல விட்ருவாங்க. 
 
கட்டில்கள், ஊஞ்சல்கள்,கைகள்,கால்கள்,எங்க மண்டைகள்னு உடையாத item எதுவும் இல்ல. கத்தி குத்து முயற்சி, ஆள் கடத்தல், கொலை முயற்சின்னு juvenile குற்றங்களும் இதில் அடக்கம். பட்டம், பம்பரம், கிட்டிப்புள், உண்டிகோல் தொடங்கி பரண்ல தொங்கர வரைக்கும் அனைத்தும் கற்றது தாத்தா வீட்ல தான்.
 
ஆனா ராத்திரி தாத்தா வீட்டுக்கு வந்துட்டா full discipline தான். உள்ள வரும் போதே அவரோட முதல் வேலை tv இழுத்து மூடி பூட்டு போடறது தான். அப்போலாம் அந்த Door வச்ச tv.. பெப்ஸி உங்கள் சாய்ஸ் மட்டும் பாத்துக்கறேன் தாத்தான்னு கெஞ்சினாக்கூட விட மாட்டார். 
 
இப்படியாக இளமை புதுமை, நீங்கள் கேட்ட பாடல், திரை விமர்சனம், நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்-னு நாங்க இழந்த show-கள் ஏராளம். எங்க பாட்டி தான் எங்களுக்கு ராக்ஸ்டார். தாத்தா பயப்படற, பேச்ச கேக்கற ஒரே ஆளு பாட்டி தான். Full swag thug life lady தான். 
 
இதெல்லாம் தினமும் நியாபகத்துல இருக்கற விஷயம் இல்ல. நேத்து இறந்து போய் அசையாம இருந்த தாத்தாவ பார்க்கும்போது மூளையின் ஓரத்துல எங்கயோ எப்பயோ புதஞ்சி மறந்துபோன ஓரு கோடி நியாபகம். டிவி சினிமாலாம் பார்க்கவே கூடாதுன்னு சொன்ன தாத்தாவோட, மெடிக்கல் காலேஜ் போகாத ஒரே பேத்தி நான். 
 
போன வாரம் கடைசியா அவர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, உன்னை உங்க அப்பா தைரியமான பொண்னா வளர்த்துருக்காரு. என் பொண்னை நீ நல்லா பாத்துப்பன்னு தெரியும் சொன்னார். எங்க தாத்தா எங்களுக்கு எந்த சொத்தும் எழுதிட்டுப் போகல, ஆனா தன்னோட முதல் சம்பளத்துல 1950ல அன்றைய காசு 24 ரூபாக்கு தன்னோட அம்மாக்கு வாங்கின தோடு் இது, இனி நீ வச்சுக்கோன்னு கொடுத்தார்.
 
இது நாம் நினைத்துப் பார்க்கக்கூடியதை விட விலைமதிப்பற்றது. உங்க அம்மாவோட தோடையும் உங்க பொண்னையும் மாப்ளையும் என் உயிர விட பத்திரமா பாத்துப்பேன் தாத்தா. சந்தோஷமா போய்ட்டு வாங்க. என்று தாத்தா பேத்திகளுக்கு இடையே எல்லோருக்கும் இருக்கும் பாசத்தை ஒரு முறை நியப்படுத்திவிட்டார் ப்ரியா பவானி ஷங்கர்.