வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 11 மே 2021 (13:37 IST)

கமலின் இந்தியன் 2-வை கைவிரித்த ஷங்கர்!

இந்தியன் 2 பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு நான் பொறுப்பல்ல என இயக்குநர் ஷங்கர் கைவிரிப்பு. 

 
இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என லைகா நிறுவனம் சமீபத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தயாரிப்பு மற்றும் இயக்குனர் தரப்பினர் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
 
இதனைத்தொடர்ந்து, இந்தியன் 2 படத்தின் தாமதத்திற்கு காரணம் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தான் என்று இயக்குநர் ஷங்கர் குற்றம் சாட்டியுள்ளார். கமலுக்கு மேக் அப் அலர்ஜி, படப்பிடிப்பில் கிரேன் விழுந்து விபத்து, ஊரடங்கு போன்றவையும் இவற்றிற்கு காரணம் எனவும் சங்கர் தெரிவித்துள்ளார்.

அதோடு, படத்தின் பட்ஜெட்டை ரூ.250 கோடியாக குறைத்தும் ஷூட்டிங்கை தொடங்க லைகா தாமதம் ஏற்படுத்தியது. எனவே, பட தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு நான் பொறுப்பல்ல என இயக்குநர் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.