முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டிய ஷங்கர் !

Sinoj| Last Modified வெள்ளி, 7 மே 2021 (18:39 IST)

திமுக கூட்டணி நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்றது. இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் 34 பேர் தமிழக அமைச்சரவையில் பதவி
ஏற்றுக்கொண்டனர்.


இன்று பதவியேற்றவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,

1)கொரொனாவுக்கு இலவச சிகிச்சை,

2)மே மாதம் 16 ஆம் தேதி முதல் ஆவின் பால் விலை குறைப்பு,

3) நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்,


4)அரிசி குடும்பதாரர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.4000,

5)100 நாட்களில் தீர்வு திட்டத்திற்உ புதியதுறை என்ற அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில் அனைத்துப் பெண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை இயக்குநர் ஷங்கர் பாராட்டு கூறியுள்ளார். அதில்,
புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

தங்களின் புதிய அரசு ஆணையில் கொரொனா நோய்க்கு இலவச மருத்துவம், மற்றும் பெண்களுகு நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என்ற அறிவிப்புக்கு பாராட்டுகள் எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :