வெயிட்டான விருந்து வெயிட்டிங்... பல நூறு கோடிகளை கொட்டி மகளை ஹீரோயினாக்கும் ஷாருக்கான்!
இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகராக சிறந்து விளங்கும் நடிகர் ஷாருக்கான் பாலிவுட் திரையுலகில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகத்திலும் உள்ள ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரர். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை காண தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது ஷாருக்கானும் மிகுந்த எதிர்பார்ப்பில் நடித்து வருகிறார். தமிழ் கலந்த சென்னை எக்ஸ்பிரஸ் படம் தமிழ் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடப்பட்டு ஹிட் ஆனதே இதற்கு முக்கிய காரணம்.
இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தற்போது தனது மகள் சனா கானை ஹீரோயினாக இறக்க முழுவீச்சில் இறங்கியுள்ளார். இதற்காக பல நுறு கொடிகளை கொட்டி அவரே தயாரிக்கவுள்ளாராம். வெப் தொடராக உருவாகப்போகும் இந்த படம் நேரடியாகவே நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. இதற்காக மகளுக்கு நடிப்பு பயிற்சி மும்முரமாக கற்றுக்கொடுக்கப்டுகிறதாம். இதன் மூலம் தனது மகளை உலக அளவில் கவனத்தை ஈர்க்க நினைத்த ஷாருக்கான் பல்வேறு மொழிகளில் இந்த தொடரை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளாராம்.