செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (10:34 IST)

தியேட்டர் கட்டணம் உயருமா? திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதில்!

தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் எக்காரணம் கொண்டும் திரையரங்க டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என திருப்பூர் சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திரையரங்குகளில் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட விட்டது என்பதும் இதனை அடுத்து பல திரைப்படங்களில் ரிலீஸ் செய்திகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலிஸூக்கு தயாராகி வருகின்றன.

லாக்டவுனுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்படும் நிலையில் டிக்கெட் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமண்யம் மறுத்துள்ளார். அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.