செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (12:19 IST)

பிரபல ஆங்கில இதழில் அறிவு படம் புறக்கணிப்பு?? – பா.ரஞ்சித் அதிருப்தி!

பிரபல ஆங்கில இதழான ரோலிஸ் ஸ்டோனின் அட்டைப்படத்தில் தெருக்குரல் அறிவின் படம் இடம்பெறாதது குறித்து பா.ரஞ்சித் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பிரபல இசை குறித்த மாத இதழான ரோலிங் ஸ்டோனின் இந்த பதிப்பில் இந்த மாத அட்டைப்படத்தில் பாடகி தீ மற்றும் ஷான் வின்செண்ட் டி பால் படங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவில் எஞ்சாயி என்சாமி மற்றும் நீயே ஒளி பாடல்கள் ஹிட் அடித்துள்ளதை தொடர்ந்து அவர்களது படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு பாடல்களையும் எழுதியவரும், எஞ்சாயி என்சாமி பாடலை பாடியவருமான தெருக்குரல் அறிவின் படம் அதில் இடம்பெறவில்லை.

இதுகுறித்து அதிருப்தி தெரிவித்து பதிவிட்டுள்ள இயக்குனர் பா.ரஞ்சித் மீண்டும் ஒருமுறை தெருக்குரல் அறிவு மறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.