வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (11:29 IST)

ரிலீஸ் ஆகாமலே மாஸ்டரை பின்னால் தள்ளிய வலிமை! – ட்விட்டர் தரவரிசையில் முதலிடம்!

ட்விட்டரில் இந்த ஆண்டு முதல் பாதியில் அதிகம் பதிவிடப்பட்ட ஹேஷ்டேகில் வலிமை முதலிடம் பெற்றுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இந்த பட அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சில மாதங்கள் முன்னதாக எந்த வித அப்டேட்டும் வராமல் இருந்தது, இதனால் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு ஹேஷ்டேக் செய்வதை வேலையாக கொண்டிருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் வலிமை அப்டேட், பாடல்கள் ஆகியவை வெளியாகின.

இந்நிலையில் ஜனவரி 1 முதல் ஜூன் 31 வரை அதிகளவில் பதிவிடப்பட்ட ஹேஷ்டேக் தரவரிசையை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் வலிமை உள்ளது. இரண்டாம் இடத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் குறித்த ஹேஷ்டேகும், மூன்றாவது இடத்தில் தெலுங்குபடமான சர்காரு வாரி பட்டா படமும் உள்ளது.