திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 நவம்பர் 2020 (16:04 IST)

ஆன்மீக சேவை செய்யப்போறேன்னு போன நடிகை திருமணம் – அதிர்ச்சி முடிவு!

நடிகை சனா கான் திடீரென திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார் சனா கான். ஆனால் அந்த படத்துக்குப் பிறகு பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் பாலிவுட்டில் சில படங்களில் நடித்தார். அங்கும் பெரிதாக வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் இப்போது திரையுலகை விட்டே விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.இதுபற்றி அவர் நேற்று சமூகவலைதளத்தில் ‘இன்று முதல் இந்த திரையுலகில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி. இன்று முதல் இல்லாதவர்களுக்கு உதவவும் என்னை படைத்தவர்களின் ஆணையை நிறைவேற்றவும் செயல்பட போகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்போது திடீரென அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரை இஸ்லாமிய வழக்கப்படி திருமணம் செய்துகொண்டுள்ளார். அவரின் திருமண புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.